செங்கோட்டையில் விவசாயிகள்
செங்கோட்டையில் விவசாயிகள்

'வன்முறையில் ஈடுபட்டவர்களுடன் எங்களுக்கு தொடர்பில்லை': விவசாயிகள் சங்கம்

தில்லி வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கிட் தெரிவித்துள்ளார்.

தில்லி வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கிட் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் கடந்த 60 நாள்களாக பஞ்சா, ஹரியாணா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காத்தால் குடியரசு நாளான இன்று தில்லியில் டிரேக்டர் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

இதையடுத்து, இன்று தில்லி காவல்துறை அனுமதி அளித்த நேரத்திற்கு முன்பே விவசாயிகள் அனுமதிக்காத பகுதிகளுக்குள் நுழைந்தனர்.

மேலும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி தில்லி எல்லைகளில் இருந்து விவசாயிகள் தில்லிக்குள் நுழைந்து வருகின்றனர். சுமார் 500 டிராக்டர்களுடன் தில்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்துள்ள அவர்கள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். செங்கோட்டையில் உள்ள சிறிய கோபுரத்தில் வழக்கமாக தேசியக்கொடி ஏற்றும் இடத்தில் விவசாய சங்கங்களின் கொடிகளை ஏற்றினர். 

இதுகுறித்து விவசாய சங்கத்தை சேர்ந்த ராகேஷ் டிக்கிட் பேசியதாவது,

தில்லியில் இன்று வன்முறையில் ஈடுபட்டவர்களை நாங்கள் அறிவோம். அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் இந்த செயலை செய்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தில்லி - சிங்கு எல்லை, ஹரியாணா- திக்ரி எல்லை, உத்தரப்பிரதேசம் - காசியாபாத், ராஜஸ்தான் - ஷாஜஹான்பூர், பஞ்சாப் - லூதியானா ஆகிய 5 மாநில எல்லைகளில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியை நோக்கி படையெடுத்துள்ளனர். சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகள் நடந்தும், டிராக்டர்களிலும் மத்திய தில்லியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com