தில்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு
By DIN | Published On : 29th January 2021 06:18 PM | Last Updated : 29th January 2021 08:10 PM | அ+அ அ- |

தில்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு
தில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தில்லி காவல்துறை கூறியதாவது,
தில்லி அப்துல் கலாம் சாலையில் உள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரகத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை மாலை 5.05 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 கார்கள் சேதமடைந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் யாரும் காயமடையவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த சாலை மூடப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சோதனை செய்து வருகின்றனர்.