இந்தியாவில் முகக்கவசம் பயன்படுத்துவோரின் விகிதம் 74% குறைந்துள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை

நாட்டில் கரோனா கரோனா பொதுமுடக்க தளர்வுகளுக்கு பின்னர் முகக்கவசம் பயன்படுத்துவோரின் விகிதம் 74 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Mask compulsory
Mask compulsory


நாட்டில் கரோனா கரோனா பொதுமுடக்க தளர்வுகளுக்கு பின்னர் முகக்கவசம் பயன்படுத்துவோரின் விகிதம் 74 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது: கரோனா பெருந்தொற்று எதிரான போராட்டத்தில் முகக்கவசம் அணிந்துகொள்வது மிக முக்கியமானது. இதனை நமது வாழ்வின் ஒரு அங்கமாக நாம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. 

கரோனா தொடர்பான பொதுமுடக்க தளர்வுகளுக்கு பின்னர் நாட்டில் முகக்கவசம் பயன்படுத்துவோரின் விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், பொதுமுடக்க தளர்வுகளுக்கு பின்னர், முகக்கவசம் பயன்படுத்துவோரின் விகிதம் 74% ஆக குறைந்துள்ளது.

மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் நாட்டில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதை கூகுளின் குறியீட்டு தரவுகள் காட்டுகிறது. இதுபோன்று மக்கள் அதிகயளவில் கூட்டம் கூட்டமாகக் கூடுவது அதிகமாக தொற்று பரவுவதற்கு காரணமாக  அமைந்துவிடும் என்பதால் முகக்கவசம் அணிவதை நம் வாழ்வில் ஒரு பதிய அங்கமாக, வழக்கமாக வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். 

மே மாதத்தில் கரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோதிலும் 50 சதவிகிதத்தினர் முகக்கவசம் அணியவில்லை  என்று எச்சரித்த அகர்வால், தொற்று பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி மற்றும் கைகளை சுத்தமாக பராமரித்தல் போன்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பொதுவாக மூன்று காரணங்களுக்காக மக்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

* மக்கள் சுவாசப் பிரச்னைகளை தவிர்ப்பதற்காக முகக்கவசத்தை அணிவதில்லை. 

* முகக்கவசம் அணிவது அசௌகரியமாக இருப்பதால் அணிவதில்லை.

* சமூக இடைவெளியை பின்பற்றுவதால் முகக்கவசத்தை அணியத் தேவையில்லை என்று நம்புவதால் அணிவதில்லை என்பது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com