11ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு ரத்து: தமிழக அரசு

11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறை

11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் 10ஆம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தலாம் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட செய்தியில்,

10ஆம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் தேர்வு எதுவும் நடத்தத் தேவையில்லை. ஒரே பாடப்பிரிவில் அதிக விண்ணப்பம் வந்தால் 9ஆம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பாடப்பிரிவு ஒதுக்கலாம்.

மேலும், 11ஆம் வகுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் கூடுதலாக 10 முதல் 15 சதவீதம் வரை மாணவர்களை கூடுதலாக சேர்த்து அரசின் வழிகாட்டுதல்படி ஜூன் 3வது வாரத்தில் வகுப்புகளை தொடங்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com