கல்லணையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மேட்டூர் அணை திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கல்லணையில்  வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
கல்லணையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தஞ்சாவூர்: மேட்டூர் அணை திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12 -ஆம் தேதி காலை திறக்கப்படவுள்ளது. இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார். 

இதற்கு முன்பாக கல்லணையில் வெள்ளிக்கிழமை காலை ஆய்வு செய்தார். அங்கு நடைபெறும் வளர்ச்சி பணிகளைப் பார்வையிட்டவர்,
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணி தொடர்பான புகைப்படங்களைப் பார்வையிட்டார். பின்னர், தூர்வாரும் பணி தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தூர்வாரும் பணி தொடர்பான புகைப்படங்களைப் பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்

இதைத்தொடர்ந்து, வல்லம் முதலை முத்து வாரியிலும், பள்ளியக்ரஹாரம் அருகே உள்ள வெண்ணாற்றிலும் நடைபெறும் தூர்வாரும் பணிகளைப் ஆய்வு செய்தார்.

தூர்வாரும் பணி தொடர்பான புகைப்படங்களைப் பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்

அப்போது நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com