பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கை எப்படி? அமைச்சர் பொன்முடி விளக்கம்

9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் க.பொன்முடி
அமைச்சர் க.பொன்முடி

9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை எவ்வாறு நடைபெறும் என குழுப்பம் நிலவி வந்தது.

இதுகுறித்து அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது,

தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நிகழ்வாண்டிற்கான சேர்க்கை 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்.

பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகளை வகுக்க, குழு அமைத்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், அண்ணாமலை, பெரியார், காமராஜ் பல்கலைக்கழகங்களின் முறைகேடு பற்றி விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com