முகப்பு தற்போதைய செய்திகள்
தெலங்கானா எம்.எல்.ஏ. எட்டலா ராஜேந்தர் ராஜிநாமா
By ANI | Published On : 12th June 2021 10:47 AM | Last Updated : 12th June 2021 11:41 AM | அ+அ அ- |

எட்டலா ராஜேந்தர்
தெலங்கானா முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எட்டலா ராஜேந்தர் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜிநாமா செய்தார்.
எட்டலா ராஜேந்தர் மீதான நில அபகரிப்பு புகாரை விசாரிக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆணையிட்ட நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் பதவியிலிருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவரிடம் கொடுத்துள்ளார்.
மேலும், அவர் விரைவில் தில்லி சென்று பாஜக தலைவர்கள் முன்னிலையில், அக்கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.