பிரதமர் மோடியுடன் ம.பி. முதல்வர் சந்திப்பு
By DIN | Published On : 16th June 2021 02:24 PM | Last Updated : 16th June 2021 02:24 PM | அ+அ அ- |

தில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் ஆலோசனையில் ஈடுபட்டார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, மாநிலத்திற்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகள், மாநில வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்தித்து செங்கல்பட்டு கரோனா தடுப்பூசி மையத்தில் உற்பத்தி உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.