ஸியோமியின் அடுத்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்
By DIN | Published On : 16th June 2021 03:42 PM | Last Updated : 16th June 2021 03:42 PM | அ+அ அ- |

ஸியோமி நிறுவனத்தின் மடிக்கும் வகையிலான ஜே18எஸ் ஸ்மார்ட்போன் இந்தாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
மிக்ஸ் ஃபோல்ட் என்ற மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்போன் கடந்த மார்ச் மாதம் ஸியோமி நிறுவனம் அறிமுகம் செய்த நிலையில், ஜே18எஸ் மாதிரி ஸ்மார்ட்போனை இந்தாண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே மடிக்கும் வகையிலும், 5000 எம்ஏஎச் பேட்டரியுடனும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மேலும், இந்த ஸ்மார்ட்போன் சிறிது மாற்றங்களுடன் மிக்ஸ் ஃபோல்ட் வகை ஃபோனில் உள்ள சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யவுள்ளனர்.
மிக்ஸ் ஃபோல்ட் சிறப்பம்சங்கள்
8.1 இன்சு அளவுள்ள தொடுதிரையுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராஸஸர், 5020 மெஹாஹட்ஸ் திறன் கொண்ட பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் டர்போசார்ஜிங் வசதிகள் உள்ளது.
இதன் எடை மற்றும் பயன்பாட்டு முறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற பிற மடிக்கும் வசதி கொண்ட செல்லிடப்பேசிகளின் எடையை விட 27 சதவீதம் இந்த செல்லிடப்பேசியின் எடை குறைக்கப்பட்டிருப்பதாகவும் ஸியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.