இந்தியா - நியூசிலாந்து இறுதிச்சுற்று: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து

மழை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இறுதிச்சுற்று: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து

மழை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் இன்று முதல் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு - மைக்கேல் காவ், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாகவும் தொலைக்காட்சி நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பாரோவும் பணியாற்றவுள்ளார்கள். கிறிஸ் பிராட், போட்டியின் நடுவராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணி நேற்றே அறிவிக்கப்பட்டது. விஹாரி இடம்பெறவில்லை. பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா ஆகிய பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் சௌதாம்ப்டனில் காலை முதலே பெய்து வரும் மழையால் முதல் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. மழை தொடர்ந்து பெய்வதால் முதல் நாள் ஆட்டத்தை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com