அதிமுகவின் 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பில்லை
அதிமுகவின் 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பில்லை

தேர்தலில் 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பில்லை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 3 அமைச்சர்களுக்கு அதிமுக தலைமை வாய்ப்பு மறுத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 3 அமைச்சர்களுக்கு அதிமுக தலைமை வாய்ப்பு மறுத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

இதில், கடந்த முறை வெற்றி பெற்று அமைச்சர்களாக பதவி வகித்து வரும் பாஸ்கரன், நிலோபர் கபில் மற்றும் வளர்மதி ஆகிய 3 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

பாஸ்கரன்:

2016 தேர்தலில் சிவகங்கை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற இவர், தமிழக காதி மற்றும் கதர்கிராமத் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

சீ.வளர்மதி: 

2016 தேர்தலில் திருவரங்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற இவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

நிலோபர் கபில்:

2016 தேர்தலில் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற இவர், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

மிதமுள்ள தற்போதைய அமைச்சர்களின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com