நாட்டில் 3.89 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு
By DIN | Published On : 18th March 2021 09:39 PM | Last Updated : 18th March 2021 09:39 PM | அ+அ அ- |

நாட்டில் 3.89 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு
நாட்டில் இதுவரை 3.89 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இன்று (வியாழக்கிழமை) மட்டும் மாலை 7 மணி வரை 17,83,303 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 3,89,20,259 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை ஊழியர்கள் முதல் டோஸ் |
சுகாதாரத்துறை ஊழியர்கள் இரண்டாம் டோஸ் |
முன்களப்பணியாளர்கள் முதல் டோஸ் |
முன்களப்பணியாளர்கள் இரண்டாம் டோஸ் |
60 வயதுக்கு மேற்பட்டோர் முதல் டோஸ் |
45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் முதல் டோஸ் |
மொத்தம் | |
மொத்த எண்ணிக்கை (49 நாள்கள்) | 76,19,786 | 46,92,962 | 78,11,126 | 21,50,198 | 1,39,18,245 | 27,27,942 | 3,89,20,259 |
இன்று |
49,750 |
59,487 | 94,375 | 2,40,660 | 10,68,492 | 2,70,539 | 17,83,303 |
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மாற்றும் மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடங்கியது.