தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு தடுப்பூசி: விவசாய சங்கத் தலைவர் வலியுறுத்தல்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமென விவசாய சங்கத் தலைவர் தலைவர் ராகேஷ் திக்காயத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் கடந்த நவம்பர் 26 முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாய பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதனால், விவசாயிகளின் போராட்டம் நவம்பர் தொடங்கி தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், நாட்டில் கரோனாவின் இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கும் சூழலில், தில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என காசிப்பூர் எல்லையில் போராடிவரும் விவசாய சங்கத் தலைவர் தலைவர் ராகேஷ் திக்காயத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com