முதல்கட்டத் தேர்தல்: அசாமில் 72%, மேற்கு வங்கத்தில் 79% வாக்குகள் பதிவு

மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் அசாமில் 72 சதவிகிதம், மேற்கு வங்கத்தில் 79 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது
முதல்கட்டத் தேர்தல்: அசாமில் 72%, மேற்கு வங்கத்தில் 79% வாக்குகள் பதிவு

மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் அசாமில் 72 சதவிகிதம், மேற்கு வங்கத்தில் 79 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 30 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. 

இந்நிலையில் மேற்குவஙகத்தில் 79.79% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அதேபோல் அசாமில் 123 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து அசாமில் 72.14% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com