சீர்காழி பகுதியில் கரோனா நிவாரண நிதி: எம்எல்ஏ பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

சீர்காழி பகுதியில் நியாய விலைக் கடைகள் மூலமாக சனிக்கிழமை முதல் கரோனா முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் பணியை எம்எல்ஏ பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
சீர்காழி பகுதியில் கரோனா நிவாரண நிதி வழங்கும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ பன்னீர்செல்வம்.
சீர்காழி பகுதியில் கரோனா நிவாரண நிதி வழங்கும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ பன்னீர்செல்வம்.


சீர்காழி: சீர்காழி பகுதியில் நியாய விலைக் கடைகள் மூலமாக சனிக்கிழமை முதல் கரோனா முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் பணியை எம்எல்ஏ பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

சீர்காழி அருகே அரசு சார்பில் நிம்மேலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சார்பதிவாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சீர்காழி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி கிருபாநிதி, மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி செயலாளர் சத்தியசீலன் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் எம் எல் ஏ கலந்துகொண்டு அத்தியூர், மருதங்குடி, நிம்மேலி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 589 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக தலா ரூ 2 ஆயிரம் வீதம் ஆக மொத்தம் ரூ 11 லட்சத்து 78 ஆயிரம் வழங்கி சிறப்புரை ஆற்றினார். 

இந்த நிகழ்ச்சியில் சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன், திமுக மாவட்ட பிரதிநிதி அன்பழகன், மாவட்ட நிர்வாகி முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கரபாண்டியன், தட்சணாமூர்த்தி, சுந்தர்ராஜன், ஒன்றிய துணை செயலாளர் சசிகுமார், கூட்டு சங்க உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி தரமாக வழங்க வேண்டும் எனவும் சேதமடைந்த நியாய விலை கட்டிடத்திற்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டுமெனவும் பன்னீர்செல்வம் எம்எல்ஏ இடம் கோரிக்கை விடுத்தனர். 

இதேபோல் கொண்டல், வள்ளுவக்குடி ,அகணி, சீர்காழி நகரத்தில் உட்பட்ட தாடாளன் கோவில் ஆகிய பகுதிகளிலுள்ள நியாய விலை கடைகளில் கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் பன்னீர்செல்வம் எம் எல் ஏ கலந்துகொண்டு பயனாளிகளுக்கு முதல் தவணையாக இரண்டாயிரத்து வழங்கி தொடங்கி வைத்தார் .இதில் கட்சி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க செயலாளர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com