டவ்-தே புயல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 
முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின்.

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

தென் கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து சனிக்கிழமை காலை புயலாக உருவானது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18 ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது. 

இந்த புயலுக்கு மியான்மா் நாடு வழங்கிய ‘டவ்-தே’ என்று பெயா் வைக்கப்படவுள்ளது. இந்த புயல் 150-160 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் காரணமாக, கேரளம், கர்நாடகம், தமிழகம், மகாராஷ்ரம், கோவா, குஜராத் மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், புயலை எதிர்கொள்வது குறித்து தென்மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன், வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com