கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு காய்கறி, மளிகை கடைகள் திறக்க தடை

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் முழுப் பொதுமுடக்கம் அமலாகவுள்ள நிலையில், மளிகை, காய்கறி கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் முழுப் பொதுமுடக்கம் அமலாகவுள்ள நிலையில், மளிகை, காய்கறி கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 10 முதல் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்தாலும் கரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது. அதனால் காய்கறி, மளிகை கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம், பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் இரவு 9 மணி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com