புயல் நிவாரண நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம்: மம்தா குற்றச்சாட்டு

புயல் நிவாரண நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம்: மம்தா குற்றச்சாட்டு

யாஸ் புயலுக்கான நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

யாஸ் புயலுக்கான நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

மத்திய கிழக்கு வங்க கடலில் இன்று காலை வலுப்பெற்றுள்ள யாஸ் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு
வடமேற்கு திசையில் ஒடிசா-மேற்குவங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து, வரும் 26ஆம் தேதி பிற்பகல் பாரதீப்-சாகர் தீவுக்கு இடையே கடக்கக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மம்தா பேசுகையில்,

யாஸ் புயலுக்கான நிவாரணத்தை முன்கூட்டியே தருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது. ஆனால் ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு ரூ. 600 கோடி ஒதுக்கியுள்ள மத்திய அரசு, மேற்கு வங்கத்திற்கு ரூ. 400 கோடி மட்டுமே ஒதுக்கி பாரபட்சம் காட்டியுள்ளது.

மேலும், மேற்கு வங்கத்தில் 4,000 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளிலுள்ள 10 லட்சம் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

புயல் பாதிப்பிலிருந்து மீண்டு வர, 51 பேரிடர் மீட்புக் குழு, 1,000 மின்சாரம் சீரமைப்பு மற்றும் 400 மொபைல் நெட்வொர்க் மறுசீரமைப்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் மாநிலத்தின் 20 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com