மேற்கு வங்க தாழ்வான பகுதிகளிலிருந்து 8 லட்சம் பேர் வெளியேற்றம்: பேரிடர் குழு

மேற்கு வங்கத்தின் தாழ்வான பகுதிகளிலிருந்து இதுவரை 8 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புப் படை வெளியிட்ட செய்தியில்,

யாஸ் புயல் நாளை மேற்கு வங்கம் அருகே கரையை கடக்கவுள்ள நிலையில், பாதிப்புக்குள்ளாகும் 14 மாவட்டங்களின் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 8,09,830 பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தனர்.

யாஸ் தீவிர புயல் கிழக்கு - மத்திய வங்கக் கடல் பகுதியில் வடக்கு - வடமேற்காக மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்த 6 மணி நேரமாக நகர்ந்து வருகிறது. இந்த தீவிர புயல் வடக்கு ஒடிஸா-மேற்கு வங்கம் கடலோரப் பகுதியில் பாரதீப்-சாகா் தீவுகள் இடையே புதன்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com