கேரளத்தில் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை: அமைச்சர் வீணா ஜார்ஜ்

கேரள மாநிலத்தில் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

கேரள மாநிலத்தில் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலையால், கேரளத்தில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.

கரோனா பரவல் குறித்து அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியது,

கேரளத்தில் கரோனா பரிசோதனை அதிகரித்த போதிலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாள்களுக்கு முன் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால், தற்போது உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஆனால் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை.

கேரளத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் தடுப்பூசி போடுவதையே இலக்காக கொண்டுள்ளோம். இருப்பினும், தடுப்பூசியில் தட்டுப்பாடு இருப்பதால் எங்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com