கோவை, ஈரோடு, திருப்பூரில் முதல்வர் நாளை ஆய்வு: பயண விவரம்

கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் தொடர்ந்து கரோனா அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்யவுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் தொடர்ந்து கரோனா அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்யவுள்ளார்.

கடந்த மே 20ஆம் தேதி கோவை, சேலம் மாவட்டங்களில் ஆய்வு பணியை முதல்வர் மேற்கொண்ட நிலையில், கரோனா தொற்று குறையாததால் மீண்டும் கோவை மாவட்டத்திற்கு செல்கிறார்.

பயண விவரம்: 

இன்று இரவு 9 மணிக்கு ஈரோடு சென்றடையும் முதல்வர், நாளை காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்கிறார். அதன்பிறகு காலை 11 மணிக்கு திருப்பூர் குமரன் கல்லூரியில் ஆய்வு பணி மேற்கொள்கிறார்.

இதையடுத்து மதியம் 12.30 மணியளவில் கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்கிறார்.

இறுதியாக மாலை 4.40 மணியளவில் நான்கு மாவட்டங்களின் நிலவரம் குறித்து கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்துவிட்டு சென்னை திரும்புகிறார்.

மேலும், தன்னை வரவேற்க திமுகவினர் யாரும் நேரில் வரவேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com