மருத்துவ அதிகாரிகள் நியமனத்திற்கு எதிரான மனு: சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மாநில அரசின் 446 மருத்துவ அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்
சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்

பிலாஸ்பூர்: மாநில அரசின் 446 மருத்துவ அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் மனுதாரருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டில் 446 மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு எம்பிபிஎஸ் பட்டதாரிகளை  நியமனம் செய்வதற்கான விளம்பரத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக மாநில அட்வகேட் ஜெனரல் அலுவலக வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் எழுத்துத் தேர்வு இல்லாமல் நியமனம் செய்வது விதிகளுக்கு எதிரானது என்றும் மருத்துவப் பயிற்சியாளர் டாக்டர் கமல் சிங் ராஜ்புத் மனு தாக்கல் செய்தார்.

முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு, பணி நியமனத்துக்கு சத்தீஸ்கர்  உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

புதன்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், ​​மாநிலத்தில் குறிப்பாக கிராமப்புறங்களில் மருத்துவ அதிகாரிகள் தேவை என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம் செய்ய விதிகள் அனுமதிக்கின்றன என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம் விதித்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com