தில்லியில் இரவு ஊரடங்கு நீக்கம்: ஏப்ரல் 1 முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம்
By PTI | Published On : 25th February 2022 03:52 PM | Last Updated : 25th February 2022 03:53 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
புது தில்லி: தில்லியில் இரவு ஊரடங்கு உத்தரவை தளர்த்தியுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 1 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
கரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறவும், ஏப்ரல் 1 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கவும், முகக்கவசம் அணியாதவர்களின் அபராதத்தை ரூ.2,000-லிருந்து ரூ.500-ஆக குறைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா நிலைமை சற்று மேம்பட்டு வருவதால் கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்பட்டதாகவும், கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார்.
வேலையிழப்பு காரணமாக மக்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...