மானாமதுரை நகராட்சி, திருப்புவனம் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி திருப்புவனம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்ற வார்டு உறுப்பினர்கள் புதன்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர்.
வார்டு உறுப்பினராகப் பதவி ஏற்றுக்கொண்ட நகர்மன்றத் தலைவர் பதவிக்காக  நிறுத்தப்பட்டுள்ள  திமுகவின் முன்னாள் எம்எல்ஏ எஸ். மாரியப்பன் கென்னடி.
வார்டு உறுப்பினராகப் பதவி ஏற்றுக்கொண்ட நகர்மன்றத் தலைவர் பதவிக்காக நிறுத்தப்பட்டுள்ள திமுகவின் முன்னாள் எம்எல்ஏ எஸ். மாரியப்பன் கென்னடி.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி திருப்புவனம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்ற வார்டு உறுப்பினர்கள் புதன்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர்.

பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட மானாமதுரையில் உருவாக்கப்பட்ட 27 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் 27 ஆவது வார்டில் வென்ற திமுகவின் தலைவர் பதவிக்கான வேட்பாளர் எஸ். மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் நட்சத்திர வார்டாக பார்க்கப்பட்ட 15 ஆவது வார்டில் ஆளும் திமுக நகரச் செயலாளர் பொன்னுசாமியை வெற்றி கொண்ட அதிமுக உறுப்பினர் தெய்வேந்திரன், சுயேச்சைகள்  நகராட்சி அலுவலகத்தில்  நகராட்சி ஆணையர் கண்ணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

அதன்பின்  பதவி ஏற்றுக்கொண்டு   வெளியே வந்த வார்டு உறுப்பினர்களுக்கு அந்தந்த அரசியல் கட்சியினர், ஆதரவாளர்கள் உறவினர்கள் என பல்வேறு தரப்பினரும் மாலைகள், சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

திருப்புவனத்தில்

திருப்புவனத்தில்  நடந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ்  தலைமை தாங்கினார்.  திருப்புவனம் பேரூராட்சியில் வென்ற தலைவர் பதவிக்கு வேட்பாளரான திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மாநில நிர்வாகி செல்வராஜ் பிள்ளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் ஒரே குடும்பத்தில் வென்ற வென்ற அயோத்தி, பரத்ராஜா, வெங்கடேஸ்வரி உள்ளிட்ட 18 வார்டு உறுப்பினர்ளும் பதவியேறறுக் கொண்டனர்.

பதவி ஏற்பு முடிந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்த இவர்களுக்கு அரசியல் கட்சியினர், ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் சால்வைகள், மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் செல்வராஜ் பிள்ளையை அவரது கட்சியினர் பட்டு துண்டால் தலையில் முண்டாசு கட்டி மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இளையான்குடியில்

இளையான்குடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் வென்ற திமுக, காங்கிரஸ், அதிமுக மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் வார்டு உறுப்பினராக பதவியேற்று கொண்டனர்

மானாமதுரையில் பதவி ஏற்பு முடிந்ததும் வேனில் ஏறி வெளியூர் சென்ற திமுக கவுன்சிலர்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும் திமுக உறுப்பினர்கள் வேனில் ஏற்றி வெளியூர் கொண்டு செல்லப்பட்டனர். மானாமதுரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் திமுக 14 வார்டுகளில் வென்றுள்ளது. சுயேச்சைகளில் சிலர் திமுகவை ஆதரிக்கின்றனர்.

தலைவர் பதவிக்கான வேட்பாளராக திமுகவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாரியப்பன் கென்னடி முன் நிறுத்தப்படுகிறார். வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் மாரியப்பன் கென்னடி தரப்பு திமுக சார்பில் வென்ற வேட்பாளர்களளை வேனில் ஏற்றி குற்றாலத்திற்கு கூட்டிச் சென்று சகல கவனிப்புகளுடன் தங்க வைத்திருந்தது.

மானாமதுரை நகராட்சியில் பதவி ஏற்றுக்கொண்ட வார்டு உறுப்பினர்கள்
மானாமதுரை நகராட்சியில் பதவி ஏற்றுக்கொண்ட வார்டு உறுப்பினர்கள்

பதவியேற்பு நிகழ்வுக்கு மானாமதுரை வந்த இவர்கள் புதன்கிழமை பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வேனில் ஏறி வெளியூர் கொண்டு செல்லப்பட்டனர். அதிமுக தரப்பில் தலைவர் பதவிக்கான போட்டி இல்லாத நிலையில் திமுக உறுப்பினர்கள் வெளியூர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

வேனில் கூட்டிச் செல்லப்பட்ட  திமுக கவுன்சிலர்கள் மதுரையில் தங்கியிருப்பார்கள். தலைவர் பதவிக்கான தேர்தல்  4-ஆம் தேதி  நடைபெறும் போது மானாமதுரைக்கு வருவார்கள் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com