கடலூர் அருகே பதற்றம்: விடுதலை சிறுத்தைகள் கொடிகம்பம் மாயம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாலூரில் இன்று அதிகாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிகம்பம் மாயமானதால் அப்பகுதியில் சாலை மறியல் நடந்தது.
பாலூரில் விசிகவினர் சாலை மறியல்.
பாலூரில் விசிகவினர் சாலை மறியல்.

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாலூரில் இன்று அதிகாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிகம்பம் மாயமானதால் அப்பகுதியில் சாலை மறியல் நடந்தது.

பண்ருட்டி அருகே நெல்லிக்குப்பம்-பாலூர் கடைத்தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்களது கட்சியின் கொடி கம்பம் நடுவதற்கு முயற்சித்தனர். அதற்கு கிராம மக்கள் மற்றும் சில சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இரு பிரிவிற்கு மோதல் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் அங்கு வந்து இருதரப்பினரிடையே சமரச கூட்டம் நடத்தினர். உடன்பாடு ஏற்படவில்லை. 

இந்நிலையில்  நேற்று இரவு விடுதலை சிறுத்தை கட்சியினர் பாலூர் கடைத்தெருவில் உள்ள திமு.க. கொடி கம்பத்தின் அருகே தங்களது கட்சியின் கொடி கம்பத்தை திடீரென்று நட்டு விட்டு சென்றனர்.

இன்று காலை அங்கு வந்த விடுதலை சிறுத்தை பிரமுகர்கள், தங்களது கட்சி கொடி கம்பத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையறிந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் அங்கு திரண்டனர்.  திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

இதன் காரணமாக  கடலூர்-பாலூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் பண்ருட்டி டி.எஸ்.பி  சபியுல்லா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டகாரர்களிடம் சமாதானம் பேசினர்.

போராட்டக்காரர்கள் ஏற்கனவே தங்களது கட்சி கொடி கம்பத்தை வைப்பது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படவில்லை. எனவே, உடனடியாக கோட்டாட்சியர் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், அதிகாரிகள் தரப்பில் யாரும் வரவில்லை. எனவே போராட்டம் தொடர்ந்தது. பதற்றம் நீடிப்பதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com