பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? - அண்ணாமலை விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்ளாதது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாலை விளக்கமளித்தார். 
பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? - அண்ணாமலை விளக்கம்


பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்ளாதது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாலை விளக்கமளித்தார். 

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வெள்ளிக்கிழமை ஊழல் பட்டியலில் இடம் பெற்றுள்ள திமுக அமைச்சா்கள் பட்டியலை வெளியிட்டார். 

பின்னர் அவரிடம் பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்ளாதது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கையில், நான் சென்னை வரும்போது நீங்கள் வரவேண்டாம், கர்நாடக பேரவைத் தேர்தலை கவனியுங்கள் என பிரதமர் கூறினார்.  அதனால்தான் சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. நாள்தோறும் பிரதமரை பார்ப்பதால் தமிழ்நாட்டில் வைத்து பிரதமரை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று அண்ணாலை கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியிடப்பட்டும். ஊழலை எதிர்க்க ஆரம்பித்தால் ஒரு கட்சியை மட்டும் எதிர்க்காமல், மொத்தமாக எதிர்க்க வேண்டும். நான் தலைவராக இருக்கும் வரை இப்படிதான் செயல்படுவேன். என்னை மாற்ற நினைத்தால் தில்லிக்கு சென்று என்னை தலைவர் பதவியில் இருந்து மாற்றுங்கள்.

ஊழலுக்கு எதிராக ஜூலையில் "என் மண், என் மக்கள்" என பாதயாத்திரை நடைபெற உள்ளது என அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com