சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் முக்கியமான வினாக்களில் ஒன்றாக இனி இதுவும் அமையலாம்!

பூமியின் மிக ஆழமான பகுதி எது? கூடிய விரைவில் சிவில் சர்வீஸ் மற்றும் குரூப் 1 போட்டித் தேர்வுகளில் இப்படி ஒரு கேள்வி இடம்பெறலாம். ஏனெனில், அப்படியொரு இடம் வெகு சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
DEEPEST PLACE ON EARTH
DEEPEST PLACE ON EARTH

பூமியின் மிக ஆழமான பகுதி எது? கூடிய விரைவில் சிவில் சர்வீஸ் மற்றும் குரூப் 1 போட்டித் தேர்வுகளில் இப்படி ஒரு கேள்வி இடம்பெறலாம். ஏனெனில், அப்படியொரு இடம் வெகு சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியின் மிக ஆழமான இடம் என்பதை நாம் இருவகையில் பொருள் கொள்ளலாம். ஒன்று நிலப்பரப்பை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆழமான பகுதியைக் கண்டறிவது. மற்றொன்று பெருங்கடல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பூமியின் ஆழமான இடத்தைக் கண்டறியும் முறை. இதில், இரண்டாவதை முன்பே சாத்தியப் படுத்தி விட்டார்கள் நம் விஞ்ஞானிகள். ஆயினும் முதலில் சொல்லப்பட்ட வகையில் நிலப்பரப்பை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு மிக ஆழமான பகுதியைக் கண்டறியும் முறை இப்போது தான் சாத்தியமாகியுள்ளது. அதன்படி, பூமியின், நிலப்பரப்பில் மிக மிக ஆழமான பகுதியாகக் கருதப்படும் பகுதியானது கிழக்கு அண்டார்டிகாவின் டென்மென் பனிப்பாறைகளுக்கு அடியில் உறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவ்விடம் பனிப்பாறைகளுக்கு அடியில் சுமார் 3.5 கிலோ மீட்டர் ஆழத்தில் உறைந்திருக்கும் பள்ளத்தாக்குப் பகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது. கடல்மட்டத்தில் இருந்து பார்க்கையில் இதன் ஆழம் 11,500 அடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் நீள, அகலங்கள் முறையே 100 கிலோ மீட்டர் மற்றும் 20 கிலோ மீட்டராகக் கணக்கிடப்பட்டுள்ளன. இதைக் கண்டறிந்த விஞ்ஞானியின் பெயர் மார்லிகம். மிக நீண்ட காலமாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மார்லிகம், இப்பகுதியானது பனிப்பாறைகள் நிறைந்த இருட்டுப் பிரதேசமாகக் காட்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சரி நிலப்பரப்பில் எதுவெனத் தெரிந்து கொண்டோம். அப்படியே பெருங்கடல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அளந்தால் பூமியின் மிக மிக ஆழமான இடமாகக் கருதப்படுவது எது தெரியுமா? சாக்கடலின் (Dead Sea) மையத்தில் அப்பகுதி இருப்பதாக முன்பே விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனராம். கடல் மட்டத்தில் இருந்து அதன் ஆழம் 1355 அடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com