முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார்!
By கார்த்திகா வாசுதேவன் | Published On : 29th January 2019 09:24 AM | Last Updated : 29th January 2019 09:30 AM | அ+அ அ- |

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் டெல்லியில் காலமானார். இவர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். 1998 முதல் 2004 வரையிலான வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின் போது ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராகக் திகழ்ந்தார். இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போது தான் கார்கில் போர் நடந்தது. அதுமட்டுமல்ல, இவர் மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரதமராக பதவி வகித்த போதும் அவரது அமைச்சரவையில் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. வட இந்தியத் தலைவர்களோடு மட்டுமல்ல தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் இவர். 88 வயதான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இன்று காலை டெல்லியில் உடல்நலக் குறைபாட்டால் காலமானார்.