மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்: ஓபிஎஸ் வரவேற்பு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்(கோப்புப்படம்)
ஓ.பன்னீர்செல்வம்(கோப்புப்படம்)


சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கரில்  நினைவிடம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வரவேற்று ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “கருணாநிதிக்கு நினைவிடம் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வரவேற்கிறேன். அவரை பற்றிய அனைத்து சிறப்பம்சங்களும் நினைவிடத்தில் இடம்பெற கோரிக்கையை வைக்கிறேன். எனது தந்தை தீவிர கலைஞர் பக்தர், அவர் பெட்டியில் எப்போதும் பராசக்தி பட வசன புத்தகம் இருக்கும்” எனத் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com