நீட் தேர்வில் சாதிக்க விரும்புவோர் கவனத்துக்கு! இதோ வந்துவிட்டது 'மை நீட்'

வரவிருக்கும் நீட் தேர்வை எழுதத் தயாராக இருக்கும் மாணவர்கள், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் எவ்வாறு தரவரிசைப்படுத்துகிறார்கள் என்பதை அறிய நல்ல செய்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நீட் தேர்வில் சாதிக்க விரும்புவோர் கவனத்துக்கு! இதோ வந்துவிட்டது 'மை நீட்'

வரவிருக்கும் நீட் தேர்வை எழுதத் தயாராக இருக்கும் மாணவர்கள், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் எவ்வாறு தரவரிசைப்படுத்துகிறார்கள் என்பதை அறிய விரும்புகிறார்களுக்கான நல்ல செய்தியாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பரிந்துரைக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு, தேர்வுக் கூடக் கண்காணிப்பாளர் கண்காணிக்கும் முறை மற்றும் தேர்வுக்கான முழு உடல் பரிசோதனையின் அவசியம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் 'நீட்' தேர்வின் அதே நெறிமுறைகளை 'மை நீட்' பின்பற்றுகிறது. இந்த மை நீட் தேர்வானது சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் ஆன்லைனில் முறையில் நடத்தப்படுகிறது. ஆனால் நீட் எழுத்துத் தேர்வாக நடத்தப்படுகிறது. இதுதான் இவை இரண்டுக்குமான வித்தியாசமாகும். 

COMED-K (கர்நாடகாவின் பொறியியல் இருக்கை தேர்வு மற்றும் ஆலோசனை மன்றம்) அமைப்பாளர்களான 'எரா அறக்கட்டளை', இந்தியாவில் (NEET) நீட் தேர்வுக்கான தேசிய அளவிலான ஒரே மாதிரி தேர்வான (MyNEET) 'மை நீட்'டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் நீட் தேர்வின் சூழலிலைப் போன்று தேர்வை எழுதும் அனுபவத்தை போட்டியாளர்களுக்கு வழங்குவதை இந்த தேர்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த 'மை நீட்' தேர்வானது இந்தியா முழுவதும் சுமார் 400 மையங்களில் ஜனவரி 04, 2020 ஆம் தேதி நடத்தப்படுகிறது. 'மை நீட்' தேர்வுக்கான பதிவுகள் நவம்பர் 15-ஆம் தேதி முதல் டிசம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெறும்.

நீட் தேர்வானது சதவீத முறையை அடிப்படையாகக் கொண்டது. பயிற்சி மையங்களில் நடத்தப்படும் மாதிரி தேர்வுகள் அவற்றின் சொந்த பாணி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு ஒரு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அங்கு அதே மையத்தின் மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டு ஒரு மாணவர் தனது நிலையை அறிந்துகொள்ள அவரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு இருக்கும் போது நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் தரவரிசையில் எங்கு உள்ளனர் என்பதை எவ்வாறு அறிந்து கொள்வார்கள்? என்று எரா அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி முரளிதர் பொன்னலூரி கேள்வி எழுப்பினார். மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், 

இந்த இடைவேளையை ஈடுசெய்வது தான் மை நீட் சோதனையின் முக்கிய நோக்கமாகும். முதல்முறையாக நீட் தேர்வு எழுதும் போது ஏற்படும் அனுபவத்தை மையமாக வைத்து, அதே சூழலில் இந்த மாதிரி தேர்வை வழங்குவது மாணவர்களுக்கு விலைமதிப்பற்ற அனுபவமாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நீட் தேர்வைப் போன்ற சிரம நிலை மற்றும் சிக்கலை மனதில் வைத்து மாதிரி தேர்வில் உள்ள கேள்விகள் கல்வியாளர்களால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேள்விகளை வடிவமைக்கும் கல்வியாளர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கு கேள்விகளை அமைப்பதில் வல்லுநர்கள் ஆவர்.

தேர்வுக்குப் பிறகு, மாணவர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் தங்கள் செயல்திறன் குறித்த விரிவான விவரங்களைப் பெறுவார்கள். இதன்மூலம் இந்திய அளவில் அவர்களின் பலம், பலவீனங்கள் மற்றும் அவர்களின் தரவரிசையை மேம்படுத்துவதற்கு எந்தெந்த தலைப்புகளில் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இந்த மாதிரி தேர்வில் கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் இடம்பெறுவதை, நாடு முழுவதும் உள்ள பயிற்சி மையங்களை அணுகி உறுதி செய்துள்ளோம். இதுவரை கணிசமான எண்ணிக்கையிலான பதிவுகளைப் பெற்றுள்ளோம். எனவே, இது ஒரு வெற்றிகரமான முயற்சியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று முரளிதர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com