வீட்டுக்குள்ளே முடங்கிய நிலையில் இணையவழி வகுப்புகளால் மன இறுக்கம்: வெளியேறி பம்பரம் விளையாடும் சிறார்கள்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், கரோனா தொற்று பொது முடக்கத்தால் வீட்டிற்குள் முடங்கியபடி, 5 மாதங்களாக செல்லிடப்பேசிகளில்
வாழப்பாடி அருகே அதிகாரிப்பட்டியில்,  சமூக இடைவெளியை கடைபிடித்து, பாரம்பரிய விளையாட்டுகளின் ஒன்றான பம்பரம் சுற்றி மகிழும் சிறுவர்–சிறுமியர்.
வாழப்பாடி அருகே அதிகாரிப்பட்டியில்,  சமூக இடைவெளியை கடைபிடித்து, பாரம்பரிய விளையாட்டுகளின் ஒன்றான பம்பரம் சுற்றி மகிழும் சிறுவர்–சிறுமியர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், கரோனா தொற்று பொது முடக்கத்தால் வீட்டிற்குள் முடங்கியபடி, 5 மாதங்களாக செல்லிடப்பேசிகளில் இணையவழியில் விளையாடி சலித்துப்போனதால், இணைய வழி வகுப்புகளால் ஏற்பட்டுள்ள மன இறுக்கத்தை போக்கிடவும், தெருக்களுக்கு வந்த சிறுவர்–சிறுமியர் சமூக இடைவெளியுடன் விளையாடுவதற்கு பொறுத்தமான, பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான பம்பரம் விளையாடி பொழுதுபோக்கி மகிழ்ந்து வருகின்றனர்.

நாடுமுழுவதும் கரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட பொது  முடக்கத்தால் கடந்த மார்ச் 24ந் தேதி முதல் தொடர்ந்து 5 மாதங்களாக பள்ளி, கல்லுாரிகள் மூடிக்கிடக்கிறது. இதனால், விசாலமான விளையாட்டு மைதானங்களில் நண்பர்களோடு ஓடியாடி விளையாடி மகிழ்ந்த சிறுவர்–சிறுமியர்கள் கூட வீட்டில் நான்கு சுவற்றுக்குள் முடங்கிப்போனார்கள்.

தொடர்ந்து 4 மாதங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செல்லிடப்பேசிகள் வாயிலாக இணையவழி விளையாட்டுகள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் வேடிக்கை விளையாட்டுகளையும் பார்த்து பார்த்து சிறுவர் சிறுமியர் சலித்து போய் விட்டனர்.

இந்நிலையில், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, செல்லிப்பேசி மற்றும் இணையவழியில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த தொடங்கி விட்டதால், சிறுவர்–சிறுமியருக்கு செல்லிடப்பேசி இணைய வழி விளையாட்டுகள், பாட வகுப்புகள் என்றாலே புளிக்கத் தொடங்கிவிட்டது. இதனால் ஏராளமான மாணவ–மாணவியர் மன இறுக்கத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

இதனால்,சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பேளூர், ஏத்தாப்பூர் உள்ளிட்ட பகுதியில், வீட்டிற்குள் முடங்கியருந்த சிறுவர்–சிறுமியர் கடந்த சில தினங்களாக, பெற்றோர்கள் அனுமதியுடன் சிறிது நேரம் வீட்டில் இருந்து வெளியே வந்து, ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விட்டு நின்று கொண்டு, சமூக இடைவெளியுடன் விளையாடுவதற்கு பொறுத்தமான, நமது பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான பம்பரம் விளையாடி பொழுதுபோக்கி மகிழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள், சிபிஅரசு, தேவகணேஷ் ஆகியோர் கூறியதாவது:

பொதுமுடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டதால் கடந்த 5 மாதங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செல்லிடப்பேசியில் இணைவழி விளையாட்டுகள், சமூக ஊடகங்களில் வேடிக்கை நிகழ்ச்சிகளை பார்த்தும் சலித்து விட்டது. இதற்கிடையே இணைய வழியில் ஆன்லைன் வகுப்புகளும் நடத்த தொடங்கி விட்டனர். இதனால் மன இறுக்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பெற்றோர் அனுமதியுடன் சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியே வந்து, நண்பர்களுடன், சமூக இடைவெளியை கடைபிடித்து விளையாடி மகிழ்வதற்கு ஏற்ற பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான பம்பரம் விளையாடுகிறோம். இந்த தருணத்தில் பம்பரம் விளையாட்டு எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com