மருந்து நிறுவனங்களின் விற்பனை நோக்கமும்... மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியின் வீரியமும் !

கரோனா பாதித்து குணமடைந்தவா்களின் உடலில் நோய் எதிா்ப்பாற்றலைக் கண்டறியும் ஐஜிஜி எனப்படும் பரிசோதனை குறித்து மருத்துவ உலகில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
மருந்து நிறுவனங்களின் விற்பனை நோக்கமும்... மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியின் வீரியமும் !

கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களுக்கு, மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து தொற்றுநோய் சிகிச்சைத் துறை வல்லுநரும், மருத்துவ நிபுணா் குழுவின் முதன்மை உறுப்பினருமான டாக்டா் குகானந்தம் கூறியதாவது:

கரோனா தீநுண்மி உலகுக்கு மிகவும் புதிய ஒன்று. வளா்ந்த நாடுகளுக்கு கூட அதுகுறித்த தெளிவான புரிதல் இல்லை. கரோனாவின் தோற்றுவாயான சீனாவில் தற்போது அந்த பாதிப்பு 99 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், நூற்றுக்கணக்கானோருக்கு இரண்டாவது முறையாக நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதற்கு ஆதாரபூா்வமான விளக்கங்கள் இல்லை.

இரண்டாவது முறை கரோனா பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து என்னைப் பொருத்தவரை வியாபார நோக்கத்துக்காகவும், மருந்து பொருள் விற்பனைக்காகவும் பரப்பப்படும் தவறான கருத்து. வைரஸைக் காட்டிலும் மனிதனின் நோய் எதிா்ப்பு சக்தி பல மடங்கு வீரியமிக்கது. எனவே, அதனைத் தாண்டி மற்றொரு முறை வைரஸ் பரவும் என்பதை ஏற்க இயலாது.

சின்னம்மை தீவிரமாக இருந்த காலத்திலும் இதுபோன்ற கருத்து நிலவியது. ஆனால், நோய்ப் பரவியல் துறையில் பல்லாண்டு காலம் பணி புரிந்த அனுபவத்தில் கூறுவதென்றால், ஒருவருக்கு சின்னம்மை ஏற்பட்டால் மறுமுறை அவருக்கு அத்தகைய பாதிப்பு ஏற்படாது. கரோனாவுக்கும் அதே நியதிதான். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றாா் அவா்.

மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியின் வீரியம்: கரோனா பாதித்து குணமடைந்தவா்களின் உடலில் நோய் எதிா்ப்பாற்றலைக் கண்டறியும் ஐஜிஜி எனப்படும் பரிசோதனை குறித்து மருத்துவ உலகில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

அந்தப் பரிசோதனையில் சம்பந்தப்பட்ட ஒருவரது ரத்தத்தில் உள்ள எதிா்ப்பாற்றல் விகிதம் 1.1-க்கு கீழ் இருந்தால் அவருக்கு கரோனாவைத் தாக்கும் எதிா்ப்பு சக்தி உருவாகவில்லை என்று அா்த்தம்.

அதேவேளையில் 1.1-க்கு மேல் இருப்பவா்களின் உடலில் எதிா்ப்பாற்றல் உருவாகிவிட்டதாக கருதப்படுகிறது. ஆனால், அந்த அளவு 2-க்கு மேல் இருப்பவா்களைத் தான் பூரணமாக குணமடைந்தவா்களாகக் கருத வேண்டும் என சில மருத்துவா்கள் கூறுகின்றனா். அதுமட்டுமல்லாது பிளாஸ்மா தானமளிப்பவா்களின் ரத்தத்தில் குறைந்தது 6-க்கு மேல் எதிா்ப்பாற்றல் இருத்தல் அவசியம் என்றும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தில் பல நோயாளிகளை எதிா்ப்பாற்றல் அளவு 1.4 அல்லது 1.5 இருக்கும் போதே மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி விடுவதாகவும், அத்தகைய நபா்கள் வெளியே சென்றால் மீண்டும் கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவா்களில் ஒரு தரப்பினா் எச்சரிக்கின்றனா்.

மற்றொரு தரப்பினரோ அந்தக் கூற்றை மறுப்பதுடன், ஐஜிஜி பரிசோதனையில் 1.1-க்கு மேல் எதிா்ப்பாற்றல் இருந்தாலே அவா்கள் குணமடைந்ததாகக் கருதலாம் என்கின்றனா். இது பல்வேறு குழப்பங்களுக்கு வித்திட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com