கரோனா தொற்றுடன் போராட ஹோமியோபதி மருந்து பலனளிக்குமா?

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காததால்
கரோனா தொற்றுடன் போராட ஹோமியோபதி மருந்து பலனளிக்குமா?

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காததால் நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் கரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு ஹோமியோபதி மருந்து பயனுள்ளதாக இருக்கும் என்று ஹோமியோபதி மற்றும் நைமி நாத் ஹோமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வரும், மருத்துவருமான பிரதீப் குப்தா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும் கரோனா தொற்று நோயாளிகளுக்கு ஹோமியோபதி மருந்துகளுடன் சிகிச்சையளிப்பதற்கான தனது பரிசோதனைகள் வெற்றிகரமான பலன்களை தந்துள்ளது என்று கூறியுள்ளார். 

தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஹோமியோபதி மூலம்  சிகிச்சையளிக்க அனுமதிக்குமாறு அவர் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் குப்தா கூறுகையில், "ஐ.சி.எம்.ஆரிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு, மே 5 ஆம் தேதி எங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக எஃப்.எச் மருத்துவக் கல்லூரியில் இருந்து 44  தொற்று நோயாளிகளை அனுமதித்தோம்.  நாங்கள் அவர்களை தலா 22 நோயாளிகள் என இரண்டு குழுக்களாக பிரித்துக் கொண்டோம்.  முதல் குழுவைச் சேர்ந்த 22 பேருக்கு ஹோமியோபதி மருந்துகள் மூலம் சிகிச்சைகள் வழங்கப்பட்டன,  மூன்று நாட்களில் அவர்களுக்கு தொற்று அறிகுறி இல்லாததும் மற்றும் ஏழு நாள்களுக்குள் அவர்களுக்கு இரண்டு பரிசோதனைகள் எடுக்கப்பட்டதில் அவர்களுக்கு தொற்று அறிகுறிகள் இல்லை என்பது பரிசோதனை அறிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த குழுவைச் சேர்ந்த 22 பேருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களும் விரைவாக குணமடைந்து வருவதற்கான அறிகுறிகள் தெரிகிறது."

இந்த சிகிச்சையை அளிக்கக்கூடிய ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஹோமியோபதிகள் இந்தியாவில் உள்ளனர் என்றார். 

மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவில் எந்த பகுதியிலும் எனது சொந்த செலவில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நான் முன்வந்துள்ளேன், இதுதொடர்பாக அனைவருடனும் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். ஏற்கெனவே ஹோமியோபதி மருந்துகள் அறியப்பட்டுள்ளன. அந்த மருந்துகளை கட்டுப்பாட்டு மண்டலங்களில் இலவசமாக வழங்க முடியும். நிறைய பாதிப்புகளை குறைக்க முடியும். "தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கண்டுபித்து கொண்டுவருவதற்கான காலம் வெகு தூரத்தில் உள்ளதால், இதனை விட்டால் வேறு வழியில்லை என்றவர்,  ஹோமியோபதி மருந்தை முயற்சிப்பதில் என்ன தீங்கு?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  

மற்றொரு ஹோமியோபதி மருத்துவர் சித்தார்த் மிஸ்ரா கூறுகையில், தொற்று பாதிப்புக்கு ஹோமியோபதி மருந்தை தடுப்பு மருந்தாக வழங்கி வருகின்றனர், இது பலரை தொற்று பாதிப்பில் குணமடைய உதவியதாகவும் அவர் கூறுகிறார். உள்ளூர் வல்லுநர்களும் ஹோமியோபதி நல்ல பலனை அளிப்பதாகவும், எந்தப் பக்க விளைவுகளும் இல்லதாதக இருக்கும் என்று கூறுகிறார்கள். எனவே, கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அரசாங்கம் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாக கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com