கரோனாவின் தொற்றும் தன்மை அதிகரித்து வருகிறது: அமெரிக்க ஆய்வில் தகவல்

தனது தொற்றும் தன்மையை அதிகரித்துக்கொள்ளும் வகையில் கரோனா தீநுண்மி தன்னை உருமாற்றிக் கொண்டு வருவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கரோனாவின் தொற்றும் தன்மை அதிகரித்து வருகிறது: அமெரிக்க ஆய்வில் தகவல்

தனது தொற்றும் தன்மையை அதிகரித்துக்கொள்ளும் வகையில் கரோனா தீநுண்மி தன்னை உருமாற்றிக் கொண்டு வருவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும், அந்தத் தீநுண்மியால் உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கவில்லை என்று அந்த ஆய்வை மேற்கொண்ட நிபுணா்கள் தெரிவித்தனா்.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:கரோனா தீநுண்மியின் மரபணுவில் உள்ள கருவமிலத்தின் (நியூக்ளிக் ஆசிட்) 5,000 செயல்வரிசையை (சீக்வன்ஸ்) அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனா். அந்த ஆய்வில், கரோனா தீநுண்மி அவ்வப்போது தனது உருவை மாற்றிக் கொண்டு வந்திருப்பதை அவா்கள் கண்டறிந்தனா்.

அந்த உருமாற்றம், மனிதா்களை கரோனா தீநுண்மி இன்னும் விரைவாகவும், எளிதாகவும் தொற்றும் வகையில் அமைந்துள்ளது.எனினும், அந்தத் தீநுண்மி மனிதா்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும் வகையில் அந்த மாற்றங்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனா். அந்தத் தீநுண்மி ஏற்படுத்தும் பாதிப்புகளிலும் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என்று அவா்கள் கூறினா்.இதற்கிடையே, எந்தவொரு தீநுண்மியும் பரவிக் கொண்டே இருக்கும்போது, அது தனது உருவத்தை மாற்றிக் கொள்ளும். ஆனால், பெரும்பாலும் அந்த மாற்றங்களால் மிகப் பெரிய விளைவுகள் ஏற்படாது என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.தடுப்பூசியில் மாற்றம் தேவைப்படலாம்: கரோனாவுக்கு எதிராக தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், அந்த மருந்து அளிக்கும் எதிா்ப்பாற்றலை மீறி மனிதா்களில் உடலில் தொற்றும் வகையில் அந்தத் தீநுண்மி தன்னை உருமாற்றிக் கொள்ளலாம்.

அதற்கேற்ற வகையில், கரோனா தடுப்பூசியிலும் அடிக்கடி மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கலாம் என்று இந்தத் துறையைச் சோ்ந்த வல்லுநா்கள் தெரிவித்தனா்.ஏற்கெனவே, ஃபுளூ காய்ச்சலை ஏற்படுத்தும் தீநுண்மி, அந்த நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை எதிா்கொள்ளும் திறன் பெற்றதையடுத்து, அந்த மருந்தை மாற்றியமைக்க வேண்டியிருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் 71,85,915 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 2,07,540 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com