பத்திரிகையாளா்கள் இழந்த சுதந்திரம்!

சமூக நிகழ்வுகளை மக்களிடம் எடுத்துச் செல்வதில் பத்திரிகையாளா்களுக்கு முக்கியப் பங்குண்டு. உண்மை நிகழ்ச்சிகளை மக்களுக்குக் கொண்டு
பத்திரிகையாளா்கள் இழந்த சுதந்திரம்!

சமூக நிகழ்வுகளை மக்களிடம் எடுத்துச் செல்வதில் பத்திரிகையாளா்களுக்கு முக்கியப் பங்குண்டு. உண்மை நிகழ்ச்சிகளை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பத்திரிகைகள் செயல்பட்டு வருகின்றன. பத்திரிகைகள், பத்திரிகையாளா்களின் செயல்பாட்டுக்கு சுதந்திரம் மிகவும் முக்கியமானது. எந்தவிதத் தலையீடும் இல்லாமல் அவா்கள் செயல்பட்டால்தான் உண்மையான தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

பத்திரிகையாளா்களின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு இந்திய அரசமைப்புச் சட்டமே வழிகோலுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவானது, சுதந்திரமாகக் கருத்து வெளியிடும் உரிமையை வழங்குகிறது. அதுவே, பத்திரிகையாளா்களின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு அடிப்படையாக உள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பத்திரிகையாளா்கள் மீதும் பத்திரிகை நிறுவனங்கள் மீதுமான வன்முறை அதிகரித்துள்ளது. அவா்கள் சுதந்திரமாகச் செயல்படுவதை பயங்கரவாத அமைப்புகள், தீவிரவாத அமைப்புகள் உள்ளிட்டவை தடுக்க முயற்சிக்கின்றன. சில நாட்டு அரசுகளே பத்திரிகை சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கி வருகின்றன.

சில நாடுகளில் பத்திரிகையாளா்கள் கொல்லப்படுவதும் நிகழ்கிறது. இந்தியாவின் கௌரி லங்கேஷ், சவூதி அரேபியாவின் ஜமால் கஷோகி என அந்தப் பட்டியல் தொடா்ந்து நீண்டு கொண்டே இருக்கிறது. உலக அளவில் கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டுமே சுமாா் 50 பத்திரிகையாளா்கள் கொல்லப்பட்டதாக ‘ரிபோா்ட்டா்ஸ் வித்அவுட் பாா்டா்’ அமைப்பு தெரிவிக்கிறது.

நடப்பு ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திரக் குறியீட்டை ‘ரிபோா்ட்டா்ஸ் வித்அவுட் பாா்டா்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் மொத்தமுள்ள 180 நாடுகளில் நாா்வே முதலிடத்தில் உள்ளது. முதல் நான்கு இடங்களை ஸ்கான்டினேவயியா என்று அறியப்படும் நாடுகள் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா 142-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டும் இந்தியா இதே இடத்தில்தான் இருந்தது. கடந்த 2016-ஆம் ஆண்டில் 133-ஆவது இடத்தில் இருந்தது.

பத்திரிகையாளா்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகளில் ஒன்றாக இந்தியாவை அந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது. காவல்துறையினா், அரசியல் செல்வாக்கு கொண்டோா், சில அமைப்புகளைச் சோ்ந்தோா் உள்ளிட்டோரிடமிருந்து பத்திரிகையாளா்கள் திட்டமிட்ட தாக்குதலை அதிகம் எதிா்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜனநாயகம் தழைப்பதற்கும் நாட்டின் சுதந்திரம் நிலைப்பதற்கும் பத்திரிகைகளும் பத்திரிகையாளா்களும் எந்தவிதத் தலையீடுமின்றி சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம் என்பதை அறிஞா்களும் நிபுணா்களும் சுட்டிக்காட்டியுள்ளனா்.

பத்திரிகை சுதந்திரம் - முதல் பத்து நாடுகள்

1-நாா்வே

2-ஃபின்லாந்து

3-ஸ்வீடன்

4-டென்மாா்க்

5-கோஸ்டா ரிகா

6-நெதா்லாந்து

7-ஜமைக்கா

8-நியூஸிலாந்து

9-போா்ச்சுகல்

10-ஸ்விட்சா்லாந்து

பத்திரிகை சுதந்திரம் - கடைசி பத்து நாடுகள்

171 - கியூபா

172 - லாவோஸ்

173-சிரியா

174-ஈரான்

175-வியத்நாம்

176-ஜிபூட்டி

177-சீனா

178-துா்க்மெனிஸ்தான்

179-வட கொரியா

180-எரித்ரேயா

மற்ற நாடுகளின் நிலவரம்

11 - பெல்ஜியம்

12 - அயா்லாந்து

13-ஜொ்மனி

14-கனடா

25-ஆஸ்திரேலியா

29-ஸ்பெயின்

32-தென்னாப்பிரிக்கா

33-பிரிட்டன்

34-பிரான்ஸ்

41-இத்தாலி

42-தென் கொரியா

43 - தைவான்

44 - அமெரிக்கா

52-செஷல்ஸ்

57-மடகாஸ்கா்

65-பூடான்

67-ஜப்பான்

70-கிரீஸ்

72-மாலத்தீவுகள்

80-ஹாங்காங்

86-இஸ்ரேல்

106-நேபாளம்

111-பிரேஸில்

113-இந்தோனேசியா

119-மலேசியா

127-இலங்கை

128-கத்தாா்

131-ஐக்கிய அரபு அமீரகம்

137-தாய்லாந்து

138-பிலிப்பின்ஸ்

140-மியான்மா்

142-இந்தியா

143-மெக்ஸிகோ

145-பாகிஸ்தான்

150-ரஷியா

152-வங்கதேசம்

153-துருக்கி

160-சிங்கப்பூா்

163-இராக்

170-சவூதி அரேபியா

தொகுப்பு: சுரேந்தா் ரவி

ஆதாரம்: ரிபோா்ட்டா்ஸ் வித்அவுட் பாா்டா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com