ஆர்க்டிக் பகுதியில் மழை பெய்தால் ஒட்டுமொத்த உலகமும் கலங்குவது ஏன்?

நூறாண்டு காலத்தில், முதல் முறையாக, ஆர்க்டிக் பகுதியில் ஒட்டு மொத்த ஆண்டும் பனிப்பொழிவை விட, அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. 
ஆர்க்டிக் பகுதியில் மழை பெய்தால் ஒட்டுமொத்த உலகமும் கலங்குவது ஏன்?
ஆர்க்டிக் பகுதியில் மழை பெய்தால் ஒட்டுமொத்த உலகமும் கலங்குவது ஏன்?

நூறாண்டு காலத்தில், முதல் முறையாக, ஆர்க்டிக் பகுதியில் ஒட்டு மொத்த ஆண்டும் பனிப்பொழிவை விட, அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. 

இது வெறும் பனிப் பகுதிகளில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது, ஒட்டுமொத்த உலக சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆர்க்டிக் பகுதியில், வெப்பமயமாதலால், இறுதிய பனிப்பாறைகள் நிறைந்த பகுதிகள் குறைந்து வருவது, இதுவரை பெரும் கவலைதரும் விஷயமாகப் பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், வெப்பமயமா ஆர்க்டிக் பகுதி, தற்போது அதிகமான மழைப்பொழிவு இருக்கும் பகுதியாகவும் மாறியுள்ளது. இதனால், நீருடனான நிலம், சுற்றுச்சூழல், கடல்பரப்புகளுக்கு இடையே சுழற்சியானது தீவிரமடையும்.

பனி உறைந்த பகுதிகள், வெப்பமயமாதல் அடைந்து, தற்போது மழைப்பொழிவு மற்றும் ஈரப்பதம் அதிகரித்து, தண்ணீர் ஆவியாகுதல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும். பனிப்பாறைகள் இல்லாத கடலிலிருந்து ஏற்படும் தண்ணீர் மேகமாகும் சுழற்சி இங்கும் நடக்கும்.

21ஆம் நூற்றாண்டில், ஆர்க்டிக் பகுதி பனி நிறைந்த பகுதியிலிருந்து, மழை நிறைந்த பகுதியாக மாறி, தண்ணீர் சூழற்சி ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த காலக்கட்டம் நிச்சயமானது இல்லை. 

இது குறித்து ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கிடைத்த தகவல்கள், இயற்கை தொடர்பு என்ற ஆய்விதழில் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், முன்கணிக்கப்பட்ட நிகழ்வு மிக விரைவாகவே தொடங்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விளைவு, இலையுதர் காலத்தில் மிக அதிகமாக நிகழும், குறிப்பாக ஆர்க்டிக் கடல், சைபீரியா உள்ளிட்ட பகுதிகள், 2090க்கு பதிலாக முன்கூட்டியே 2070லேயே மழை அதிகம் நிறைந்த பகுதியாக மாறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்க்டிக் பகுதியில் நடைபெறும் மிகத் தீவிரமான தண்ணீர் சுழற்சி முறை, நிலப்பரப்பு, கடல் பரப்பின் சுற்றுச்சூழல் மீது மிகப்பெரிய விளைவை உருவாக்கும். உங்களது உள்ளுணர்வு நினைக்கலாம், வெப்பமயமாதல் மற்றும் மழைப்பொழிவு போன்றவை ஆர்க்டிக் பகுதியில் மிகச் சிறந்த சூழலை ஏற்படுத்தும், அது சுற்றுச்சூழலுக்கும் சிறப்பாக இருக்கும் என்று. ஆர்க்டிக் பகுதியில் மரங்கள் அற்ற பெரும் வெற்றிடப் பகுதியைக் காட்டிலும், மழைக்காடுகளில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. ஆனால், பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக, ஆர்க்டிக் பகுதியில் வசிக்கும் விலங்குகளும், தாவரங்களும் கூட, அந்த தட்பவெப்பநிலைக்கு ஏற்ற வகையில் வாழப் பழகிவிட்டன, அவைகளின் மிக எளிமையான உணவு வழக்கம், இந்த மாற்றத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படக்கூடும்.

பொதுவாக, வெப்பமயமான பகுதிகளில், கொசு போன்ற பூச்சியினங்களின் முட்டைகள் விரைவாகவே குஞ்சு பொரித்துவிடும், அதாவது, இதனை உண்டு வாழும் மீன்களின் குஞ்சுகள் பொரிப்பதற்கு முன்பே. ஆனால், அதிக மழைப்பொழிவு இருக்கும் பகுதிகளில் அதிக சத்துகள், மழைநீர் வழியாக ஆற்றில் கலந்துவிடும், இதனால்,  உணவுச் சங்கிலிக்கு அடிப்படையான தண்ணீரிலிருக்கும் சிறு தாவரங்கள் மிகுந்த பயன்பெறும்.

ஆனால், இவைகளால், ஆற்று நீரும், கடல்நீர்ப்பரப்புகளும் இருண்டுவிடும். இதனால் வெளியிலிருந்து வெளிச்சம், தண்ணீர் பரப்புக்குள் செல்லாது, இதனால், ஒளிச்சேர்க்கை மற்றும் உணவை வடிகட்டிச் சாப்பிடும் சுறாக்கள் மற்றும் திமிங்கலுக்கு தேவையானது. சுத்தமான மற்றும் கடல்நீரை விடவும், இருண்ட தண்ணீர்தான், சில வகையான பூச்சிகள் மற்றும் உயிரினங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும், எனவே, கடற்பரப்பில், அதிக சுத்தமான தண்ணீர்போய்ச்சேருதல், ஆர்க்டிக் கடற்கரை உள்பட, அங்கிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்களைக் குறைத்துவிடும்.

ஆர்க்டிக் பகுதிக்காக, உலகளாவிய சராசரி வெப்பநிலையானது 1.5 டிகிரி செல்சியஸ் என்பதன் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு அடிக்கோலிட்டு காட்டுகிறது. உதாரணமாக, இந்த சராசரி வெப்பநிலையிலேயே, கிரீன்லாந்து பகுதி, பெரும்பாலான ஆண்டுகளில் மழைப்பொழிவுப் பகுதியாக மாறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது 3 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்தால், ஆர்க்டிக் பகுதி முழுக்க 21 ஆம் நூற்றாண்டு முடிவதற்கு முன்பே, மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் பகுதியாக மாறிவிடக் கூடும்.

ஆர்க்டிக் பகுதியின் மீது உலக சுற்றுச்சூழல் நிபுணர்களின் கவனம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதையும், உலக வெப்பமயமாதல் தொடர்பாக விழிப்புணர்வு அதிகப்பட வேண்டும் என்பதற்கும் மேலும் அழுத்தம் கொடுப்பதாக இந்த ஆய்வறிக்கை அமைந்துள்ளது.


-ரிச்சர்ட் ஹோட்ஜ்கின்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com