புத்தாண்டில் மூடப்பட்ட நூற்றாண்டு உணவகம்

நூற்றாண்டு கடந்து இயங்கி வந்த சான் பிரான்சிஸ்கோவின் கிளிஃப் ஹவுஸ் உணவகம் கரோனா தொற்றால் ஏற்பட்ட இழப்பு மற்றும் ஒப்பந்தப் புதுப்பிப்பு சிக்கல் காரணமாக வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கிளிஃப் ஹவுஸ் உணவகம்
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கிளிஃப் ஹவுஸ் உணவகம்

நூற்றாண்டு கடந்து இயங்கி வந்த சான் பிரான்சிஸ்கோவின் கிளிஃப் ஹவுஸ் உணவகம் கரோனா தொற்றால் ஏற்பட்ட இழப்பு மற்றும் ஒப்பந்தப் புதுப்பிப்பு சிக்கல் காரணமாக வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

சான்பிரான்சிஸ்கோவின் சுற்றுலா அடையாளமாக அமைந்துள்ளது கிளிஃப் ஹவுஸ் உணவகம். 1863ஆம் ஆண்டில் பசுபிக் பெருங்கடலையொட்டிய மலை உச்சியில் அமைக்கப்பட்ட இந்த உணவகம் பல்வேறு நாட்டு சுற்றுலாப்பயணிகளின் விருப்பமான இடமாக இருந்து வந்தது.

1977ஆம் ஆண்டு தேசிய பூங்காவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் மூலம் இயங்கி வந்த நிலையில் 2018ஆம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியானது. அதனைத் தொடர்ந்து குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் உணவகம் இயங்கி வந்தது. 

இந்நிலையில் ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக சுமூகமான உடன்பாட்டு முடிவுகள் எட்டப்படாததால் உணவகம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1973 ஆம் ஆண்டு முதல் உணவகத்தின் உரிமையாளர்களாக இருந்து வரும் டான் மற்றும் மேரி ஹவுண்டலாஸ், கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பேரிடர்களில் சிக்கிய போதிலும் தொடர்ந்து இயங்கி வந்த இந்த உணவகம் கரோனா தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் உணவக ஒப்பந்தத்தை புதுப்பிக்க இயலாமை ஆகிய காரணங்களால் 2021 ஜனவரி 1ஆம் தேதி மூடப்படுவதாக தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து உணவகத்தின் பெயர் பலகை அகற்றப்பட்டது. இந்த நிகழ்வில் உள்ளூர் மக்கள் அந்த உணவகத்திற்கு முன் திரண்டு நூற்றாண்டு கடந்த உணவகத்திற்கு விடை கொடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com