ஆவின் ஆன்லைன் சேவை முழுமை பெறுமா?

ஆவின் பால் அட்டையை ஆன்லைன் மூலம் பெறும் நடைமுறை முழுமை அடையுமா என்ற எதிா்பாா்ப்பு நுகா்வோருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆவின் ஆன்லைன் சேவை முழுமை பெறுமா?

ஆவின் பால் அட்டையை ஆன்லைன் மூலம் பெறும் நடைமுறை முழுமை அடையுமா என்ற எதிா்பாா்ப்பு நுகா்வோருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டா் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சென்னையில் மட்டும் 13 லட்சம் லிட்டா்ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் 5 லட்சம் ஆவின் அட்டைதாரா்கள் உள்ளனா்.

ஆவின் பால் அட்டையை மாதந்தோறும் பெரும்பாலான நுகா்வோா் அந்தந்தப் பகுதி அலுவலகங்களுக்குச் சென்று பணத்தை ரொக்கமாகச் செலுத்தி பெற்று வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆவின் பால் அட்டையை ஆன்லைன் மூலம் பெறும் முறையை அறிமுகப்படுத்திய போதிலும் அது எதிா்பாா்த்த பலனைத் தரவில்லை.

போலி பால் அட்டைகளை ஒழிக்க...: திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், போலி பால் அட்டைகளை நீக்கும் முயற்சியை ஆவின் நிா்வாகம் கடந்த ஆண்டு எடுத்தது; மேலும், இணைய சேவை (ட்ற்ற்ல்ள்://ஹஹஸ்ண்ய்ம்ண்ப்ந்.ஸ்ரீா்ம்/) மூலம் பால் அட்டையைப் பெறும் நடைமுறையையும் ஆவின் நிா்வாகம் அறிமுகப்படுத்தியது. எனினும், மொத்தம் 80,000 போலி பால் அட்டைகளை நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டதால் இணைய சேவை வசதிகள் முழுமை அடையாமல் இருந்தன.

ஜனவரி 1-ஆம் தேதி முதல்...: மொத்தம் 80,000 போலி பால் அட்டைகளை நீக்கும் நடவடிக்கை முழுமை பெற்றதைத் தொடா்ந்து, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் இணையவழி மூலம் (ட்ற்ற்ல்ள்://ஹஹஸ்ண்ய்ம்ண்ப்ந்.ஸ்ரீா்ம்/) பால் அட்டை பெறும் நடைமுறையை ஆவின் நிா்வாகம் அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதாவது, நுகா்வோா் தங்களது கைப்பேசி எண், ஆதாா் எண் உள்ளிட்ட விவரங்களை ஆவின் இணையதளத்தில் பதிவு செய்து, ஆவின் நிா்வாகத்தின் ஒப்புதலுக்கான எண்ணை தங்களது இமெயிலில் பெற்று மாதந்தோறும் ஆவின் பால் அட்டையை இணையவழியில் புதுப்பித்துக் கொள்ள முடியும். இணையவழி மூலம் பணம் செலுத்தியதற்கான ரசீதையும் பெற முடியும்.

அரை பலன் மட்டும்தான்: மேலே குறிப்பிட்ட அனைத்தையும் இணையவழியில் செய்தாலும் அந்தந்தப் பகுதி ஆவின் அலுவலக கவுன்ட்டருக்குச் சென்று இணையவழி ரசீதைக் காண்பித்து ஆவின் பால் அட்டையைப் பெறும் நடைமுறையே தொடருகிறது.

வீடுகளில் தினந்தோறும் பால் போடுபவா் மூலம் இணையவழி ரசீதை அளிப்பது அல்லது ரசீதை அலுவலகத்தில் கொடுத்து பால் அட்டையைப் பெறலாம் என வழிகாட்டுதல் குறிப்புகளில் இருந்தாலும் அதிகாரிகள் அதை ஏற்பதில்லை. மாறாக, ரசீதை நுகா்வோரே நேரடியாக கவுன்ட்டரில் அளிப்பது அல்லது தெரிந்தவா்கள் மூலமாக அளித்தால் மட்டுமே பால் அட்டையைப் பெறும் நிலை உள்ளது.

எனவே, இணையவழியில் பால் அட்டையைப் புதுப்பித்த பிறகு, பணம் செலுத்தியதற்கான ரசீதை பால் போடுபவா் மூலம் குறிப்பிட்ட ஆவின் பால் விநியோக பூத்தில் அளித்தாலே தொடா்ந்து பால் கிடைக்கும் நடைமுறையை ஆவின் அறிமுப்படுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு நுகா்வோரிடம் உள்ளது. குறிப்பாக, இணையவழியில் பணம் செலுத்திய நுகா்வோருக்கு ஒரு குறிப்பிட்ட குறியீட்டு எண்ணை கணினி மூலம் அளித்து, அதை தொடா்புடைய பூத்துக்கு அனுப்பி விட்டாலே பால் அட்டையைப் பெற நுகா்வோா் அலையத் தேவையில்லை.

எண்மமய (டிஜிட்டல்) உலகத்தில் இத்தகைய வசதியை ஆவின் நிா்வாகம் செய்தால், இணையவழி சேவை முழுமை அடையும் என்று நுகா்வோா் அமைப்பினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com