Enable Javscript for better performance
புதுச்சேரியில் ஜெ.வுக்கு முழு உருவச்சிலை: முதல்வரிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் ஜெ.வுக்கு முழு உருவச்சிலை: முதல்வரிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை

    By DIN  |   Published on : 08th December 2016 05:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கலச் சிலையை நிறுவ வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் குழு இன்று முதல்வர் நாராயணசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    சட்டப்பேரவை அதிமுக தலைவர் ஆ.அன்பழகன் தலைமையில் எம்.எல்.ஏக்கள் ஆ.பாஸ்கர், வையாபுரிமணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    அதில் கூறியிருப்பதாவது:
    அதிமுக நிரந்தர பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் தமிழ் மக்கள் நலனுக்காக பாடுபட்டார். 6 முறை தமிழகத்தின் முதல்வராக செயல்பட்டு தேசிய தலைவராக விளங்கியவர் ஜெயலலிதா. இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும், பெண் தலைவர்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழந்தவர்.
    தமிழக மக்கள் தொடர்பான பிரச்னைகளில் சமரசம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து போராடி வெற்றி கண்டார். உலக தமிழ் மக்களின இதயமாக வாழ்ந்தவர்.
    குடியரசுத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் துணைத் தலைவர், முதல்வர்கள் கட்சி வித்தியாசமின்றி நேரடியாக அஞ்சலி செலுத்தினர். இவ்வாறு தனிச்சிறப்பு மிக்க தலைவராக திகழந்த ஜெயலலிதாவுக்கு புதுச்சேரி மாநில அரசு சார்பில் கீழ்காணும் இடங்களில் முழுவுருவ வெண்கலச்சிலையை நிறுவ வேண்டும்.
    கடற்கரைச் சாலை காந்தி சிலை, பழைய அஜந்தா சிக்னல் ரவுண்டானா, ராஜா தியேட்டர் சிக்னல் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் முழு உருவச் சிலையை வைக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளனர்.
    பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் வி.நாராயணசாமி கூறியதாவது:
    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் சிலை வைக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் உரிய முடிவெடுக்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai