Enable Javscript for better performance
இன்று ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரம்- Dinamani

சுடச்சுட

    
    1-10

    வர்தா புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் சென்னையில் ரயில் சேவையில் மாற்றமும், சில ரயில்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்க கடலில் உருவாகிய வர்தா புயல் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில்  பழவேற்காடு அருகே புயல் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

    வர்தா புயல் காரணமாக சென்னையில் ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி செல்லும் ரயில்கள், சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிபூண்டி மற்றும் சூளூர்பேட்டை செல்லும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு தகவல் வெளியிடப்படும் வரையில் இவை புறப்படாது.   

    சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு தடத்திலான சேவைகள் 45 நிமிடத்துக்கு ஒரு முறை புறப்படும்.

    சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் ரயில் சேவையில் தற்போது எந்தவித மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல இயக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் சேவையிலும் எந்த மாற்றமின்றி, வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா செல்லும் ரயில் கூடூர் வரை மட்டுமே இயக்கப்படும். நவஜீவன் எக்ஸ்ப்ரஸ் (சென்னை - அகமதாபாத்) மற்றும் பூரிக்கு வாரம் ஒருமுறை இயக்கப்படும் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் ரயில் சேவைகள் இன்று மாற்று வழித்தடத்தில் கூடூர். ரேணிகுண்டா, அரக்கோணம் வழியே செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai