Enable Javscript for better performance
சென்னையில் முக்கிய சாலைகள் சீரமைக்கப்பட்டன!- Dinamani

சுடச்சுட

    
    download

     

     

    வர்தா புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சாலைகள் போர்க்கால அடிப்படையில்  சீரமைக்கப்பட்டுள்ளது.  சீரமகைப்பட்ட சாலைகளின் விபரங்களை  #Roadscleared https://twitter.com/search?q=%23Roadscleared&src=typd என்ற ஹாஷ்டேக் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    அண்ணா சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜாஜி சாலை, ஆர்.கே.சாலை, சர்தார் படேல் சாலை மற்றும் லால்பகதூர் சாஸ்திரி சாலை ஆகிய சாலைகள் இன்று சீரமைக்கப்பட்டுவிட்டன என்று இந்த டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கிறது மாநில பேரிடர் மேலாண்மை வாரியம்.  

    வர்தா புயலால் 3,300-க்கும் மேற்பட்ட சாலையோர மரங்கள்வேரோடு சாய்ந்து விழுந்து கிடந்தன. இந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள், தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்பணியில் இயந்திரங்கள் மூலமாக மரங்களை அறுத்து, ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக அவற்றை துரித கதியில் அகற்றி வருகின்றனர். ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் இளைஞர்களும் களத்தில் இறங்கியுள்ளதால், மரங்கள் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீராகத் தொடங்கியுள்ளது. 

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட மூன்றாயிரம் மின் கம்பங்கள் அடியோடு பெயர்ந்து விழுந்திருந்தன. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் வெவ்வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டன.

    சென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. நெல்சன் மாணிக்கம் சாலை, நுங்கம்பாக்கம் மற்றும் ஆற்காடு சாலையிலும் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. வில்லிவாக்கம், வட சென்னைப் பகுதிகள், மந்தைவெளி, மயிலாப்பூர், பெருங்குடி மற்றும் ஓஎம்ஆர் பகுதிகளில் இன்னும் பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் தொடங்கப்படவில்லை. பாடி, அம்பத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்களிலிருந்து விழுந்த இலைகளாலும் தேங்கிய மழை நீராலும் போக்குவரத்து மெதுவாக உள்ளது. விரைவில் அனைத்து சாலைகளும் சீராகி, வழமையான சேவைகளை போக்குவரத்து கழகம் தொடங்கிவிடும் என்று தெரிவித்துள்ளது மாநில பேரிடர் மேலாண்மை வாரியம்.  .

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai