Enable Javscript for better performance
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    By DIN  |   Published on : 13th December 2016 07:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    download

    சென்னை: வர்தா புயல் சீற்றத்தை அடுத்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  
    சென்னையில் நேற்று கோரத் தாண்டவம் ஆடிய வர்தா புயல் சீற்றத்தால் நேற்று மதியம் 11 மணி முதல் இரவு 8 மணி வரை பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக, பல கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் பிய்த்தெறியப்பட்டன. மேற்கூரைகள் காற்றில் பறந்தன. ஆயிரக்கணக்கில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. வீடுகளில், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார், வேன் போன்ற பல வாகனங்கள் மரங்கள் விழுந்ததால் நொறுங்கி சின்னாபின்மானது. மேலும் மரங்கள் கட்டடங்கள் மீது விழுந்ததில் சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்தன.வீடுகளில் இருந்த நீர்த்தேக்க தொட்டிகள், பழைய கட்டடங்கள் பலவும் பலத்த காற்றால் இடிந்து விழுந்தது.
    192 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய கடுமையான சூறைக் காற்று காரணமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், மின்கம்பிகள் அறுந்தும், மின்மாற்றிகள் முறிந்து விழுந்தன. கம்பங்கள் விழுந்ததில் கேபிள் டிவி ஒயர்களும் அறுந்து நகரின் பல பகுதிகளில் சாலைகள், கட்டடங்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால், மின்சார சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.
    வார்தா புயல் சீற்றம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக கல்வித்துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai