Enable Javscript for better performance
பாலாற்றில் வெள்ளம்: 5 பேரை மீட்கும் பணி தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    மதுராந்தகம் அருகே பாலாற்றில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், ஆடு, மாடுகளை மேய்க்கச் சென்ற 70 வயது மூதாட்டி உள்பட 5 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மேலாண்மை குழுவினர், தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல், ஆடு, மாடுகளை ஆற்றின் கரையோரம் மேய்க்கச் சென்றனர். அப்போது, பலத்த மழை காரணமாக செங்கல்பட்டு, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழைநீர் கால்வாய்களின் வழியாக பாலாற்றின் இரு கரைகளை தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுது சென்றது.

    இதில், சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளும், மாடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனைக் கண்ட பூதூர், எல்.என்.புரம் கிராமங்களைச் சேர்ந்த திலீப்குமார் (28), வினோத் (26), மதன் (26), சிலம்பரசன் (27), முனியம்மாள் (70) ஆகியோர் தங்களின் ஆடு, மாடுகளை காப்பாற்ற முயன்றனர்.

    இதற்கிடையே, மாமல்லபுரத்தில் இருந்து இயந்திர படகு கொண்டு வந்தோ அல்லது ஹெலிகாப்டர் மூலமோ அவர்களை மீட்பதற்கு ஆலோசிக்கப்பட்டது. இதனால் பூதூர், எல்.என்.புரம் உள்ளிட்ட கிராம மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai