புயலால் பாதிக்கப்பட்டோருக்கு திமுக துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்
By DIN | Published on : 13th December 2016 06:12 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக துணை நிற்கும் என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
வர்தா புயல் சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி 10-க்கும் மேற்பட்டோரைப் பலியாக்கி இருப்பதுடன், பெரும் துயத்தையும் உருவாக்கிச் சென்றுள்ளது. புயல் தாக்கிய பகுதிகள் மொத்தமாக முடங்கியுள்ளன.
திமுகவினர் உதவ வேண்டும்: புயல் மற்றும் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், பாதுகாப்பு காரணங்களுக்காக முகாம்களில் தங்கியுள்ளோருக்கும் திமுகவினர் அந்தந்தப் பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பொதுநல அமைப்புகளுடன் இணைந்து தேவைப்படும் உதவிகளைச் செய்ய வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட வேண்டும்.
புயலால் சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்துமாறும், மின் விநியோகத்தைச் சீராக்குமாறும் அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.