Enable Javscript for better performance
வர்தா புயல் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: அன்புமணி- Dinamani

சுடச்சுட

    

    வர்தா புயல் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: அன்புமணி

    By DIN  |   Published on : 13th December 2016 06:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    anbumani1

    வர்தா புயல் நிவாரணப் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    வர்தா புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டெழுந்து வரும் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் சேதங்களில் இருந்து மீள இன்னும் அதிக காலம் ஆகும்.

    தமிழக அரசுக்குப் பாராட்டு: சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட தமிழக அரசும், உள்ளாட்சிகள் உள்ளிட்ட பிற அமைப்புகளும் இம்முறை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. இது பாராட்டப்பட வேண்டியதாகும்.

    ஆனால், பெரும்பாலான இடங்களில் 120 கி.மீ. வேகத்திலும், சில இடங்களில் 182 கி.மீ. வேகத்திலும் தாக்கிய புயலால் சென்னை மாநகரமும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

    பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.4 லட்சம் இழப்பீடு போதுமானது இல்லை. அதை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். வீடு மற்றும் உடைமைகளை இழந்தவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

    காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் புயலால் சேதமடைந்த நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், பணப் பயிர்களுக்கு அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்ற வகையிலும் இழப்பீடு வழங்க வேண்டும்.

    சென்னையிலும், புறநகர் மாவட்டங்களிலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தேவையான உதவிகளை பாமகவினர் வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai