Enable Javscript for better performance
2 கப்பல்களில் நிவாரணப் பொருட்கள் சென்னைக்கு வந்தன- Dinamani

சுடச்சுட

    

    வங்கக் கடலில் உருவான வர்தா புயலால், நேற்று மதியம் 11 மணி முதல் இரவு 8 மணி வரை பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக, பல கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் பிய்த்தெறியப்பட்டன. மேற்கூரைகள் காற்றில் பறந்தன. ஆயிரக்கணக்கில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. வீடுகளில், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார், வேன் போன்ற பல வாகனங்கள் மரங்கள் விழுந்ததால் நொறுங்கி சின்னாபின்மானது. மேலும் மரங்கள் கட்டடங்கள் மீது விழுந்ததில் சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்தன.வீடுகளில் இருந்த நீர்த்தேக்க தொட்டிகள், பழைய கட்டடங்கள் பலவும் பலத்த காற்றால் இடிந்து விழுந்தது.
    192 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய கடுமையான சூறைக் காற்று காரணமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், மின்கம்பிகள் அறுந்தும், மின்மாற்றிகள் முறிந்து விழுந்தன. கம்பங்கள் விழுந்ததில் கேபிள் டிவி ஒயர்களும் அறுந்து நகரின் பல பகுதிகளில் சாலைகள், கட்டடங்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால், மின்சார சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.
    இந்நிலையில், கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்களில் நிவாரணப் பொருட்கள் சென்னை வந்து சேர்ந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai