Enable Javscript for better performance
கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி- Dinamani

சுடச்சுட

    
    Karunanidhi

    சளித்தொல்லை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைப்பாட்டின் காரணமாக, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து புதன்கிழமை (டிசம்பர் 7) இரவு 10 மணியளவில் அவர் வீடு திரும்பினார். எனினும், சிகிச்சை அளித்த மருத்துவர்களால் வீட்டில் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டது.மேலும் அவரின் உடல் நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும் பணியையும் காவேரி மருத்துவமனை பணியாளர்கள் அவர் வீட்டிலேயே மேற்கொள்வார்கள் என்றும் மருத்துவர்கள் சார்பில் கூறப்பட்டது.  இந்நிலையில் சளித்தொல்லை காரணமாக இன்று (டிசம்பர்15 ) இரவு 11.15 மணி அளவில் மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தொண்டை, நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், நோய் தொற்றை குணப்படுத்த மருத்துவர்கள் சிகிச்சையளித்துவருவதாகவும்  மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai