Enable Javscript for better performance
கோவையில் ஒரே நாளில் இரு யானைகள் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் இரு யானைகள் வெவ்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

    ஆலாந்துறை அருகே உள்ள வளையன்குட்டையை அடுத்த வேங்கைமரத்துக்காடு வனப் பகுதியில் ஆண் யானை ஒன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இறந்து கிடந்தது. இந்த யானை உடல் நலக்குறைவால் உயிரிழந்ததா அல்லது யானைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததா என்பது பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரிய வரும் என்று மதுக்கரை வனத் துறையினர் தெரிவித்தனர்.

    சிறுமுகை வனச் சரகத்துக்கு உள்பட்ட பவானிசாகர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் , பெத்திக்குட்டையை அடுத்த கருப்பராயன் கோயில் அருகே சுமார் 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்துகிடப்பது தெரியவந்தது. பின்னர், அந்த யானைக்கு உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் யானை உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.

    கோவை மாவட்ட வனப் பகுதிகளில் ஒரே நாளில் இரு யானைகள் உயிரிழந்தது வன விலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai