Enable Javscript for better performance
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி: சுப்பிரமணிய சுவாமிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி: சுப்பிரமணிய சுவாமிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

    By DIN  |   Published on : 08th October 2016 01:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    31

    தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்த கோரிய சுப்பிரமணிய சுவாமிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
    தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா உடல் நலமின்றி மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் வழக்கம் போல் தனது பணிகளை தொடர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.

    இந்நிலைக்கு மாறாக பாஜகவின் மூத்த தலைவர் எனக் கூறப்படும் நாடாளுமன்ற மேலவையின் நியமன உறுப்பினராக உள்ள சுப்பிரமணிய சுவாமி, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 356 ஐ பயன்படுத்தி தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல் படுத்திட வேண்டும் என்றும், சட்டப் பேரவையை முடக்கி வைக்க வேண்டும் என்றும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ஆறு மாத காலத்திற்கு அமுல்படுத்திட வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

    சுப்பிரமணிய சுவாமியின் இத்தகைய கருத்து கடும் கண்டனத்திற்குரியது. இக்கருத்து அவருடைய சொந்த கருத்தா? அல்லது பாஜகவின் அகில இந்திய தலைமையின் கருத்தா? அல்லது நாட்டை ஆளும் பிரதமரின் கருத்தா? அல்லது தமிழ்நாடு பாஜகவின் கருத்தா? என்பதனை சம்பந்த பட்டவர்கள் தான் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

    ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்க முற்படுவது ஜனநாயக விரோத செயலாகும். கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து, வன்முறையாளர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொணடு தமிழ்நாட்டை சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயிட்டு கொலுத்தப்பட்டது, தமிழ்மக்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள், வாகனங்கள் ஒருமாத காலத்திற்கும் மேலாக பெங்களூரு வழியாக செல்ல இயலவில்லை. இதன் காரணமாக ரூ 1200 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. இத்தகைய சட்டமீறல்கள் அனைத்தும் நடந்த போது பாஜகவின் மூத்த தலைவர் எங்கே போனார்?

    சுவாமியின் கருத்தை அலட்சியப் படுத்திட முடியாது. பாஜகவின் தூண்டுதலால் இக்கருத்து வெளிப்படுத்தப்படுகின்றது. குழம்பிய குட்டையில் மீன்படிக்க பாஜக முயல்கின்றது.

    முதல்வரின் உடல் நிலையைக் காரணம் காட்டி, ஜனநாயக விரோத செயலில் யார் ஈடுபட்டாலும், அதனை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai