Enable Javscript for better performance
பாரிக்கர் மீது ஆம் ஆத்மி தேச விரோதப் புகார்- Dinamani

சுடச்சுட

    

    பாரிக்கர் மீது ஆம் ஆத்மி தேச விரோதப் புகார்

    By புது தில்லி  |   Published on : 08th October 2016 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய ராணுவத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், பாஜக செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்மராவ் ஆகியோருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி, தேச விரோதப் புகார் கொடுத்துள்ளது.

    இதுதொடர்பாக, தில்லி ஐ.பி. எஸ்டேட் காவல் நிலையத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி நிர்வாகி திலீப் பாண்டே வெள்ளிக்கிழமை புகார் அளித்தார்.
    அதில், பாரிக்கர், ராவ் ஆகியோரின் கருத்துகள், இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தும் வகையில் மட்டுமன்றி, ராணுவத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது என்று திலீப் பாண்டே குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதை அடுத்து, உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பாரிக்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ""ஹனுமனின் அபார திறமையை ஜாம்பவான் எடுத்துக் கூறிய பிறகு, ஒரே பாய்ச்சலில் இந்தியப் பெருங்கடலை அவர் கடந்து சென்றார்; அதுபோல, அதிரடி தாக்குதலுக்கு முன் இந்திய ராணுவத்துக்கு தனது முழு வலிமை தெரியாமல் இருந்தது'' என்று பாரிக்கர் கூறினார்.

    இதேபோல், ""இந்திய ராணுவம் முதல் முறையாகத் தனது வலிமையைத் தெரிந்து கொண்டிருக்கிறது'' என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்மராவ் கூறியதாகவும், இதன் மூலம், ராணுவத்தையும், அதன் தியாகத்தையும் அவர்கள் கொச்சைப் படுத்திவிட்டதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai